- ராஜகணபதி
- மாங்காடு அம்மன் திரைப்படங்கள்
- அலவன்
- பணமில்லாத ஷிவாகோ
- ஜோஸ் பிராங்க்ளின்
- சதீஷ்
- ராஜகணபதி
- மெகா
- சந்திரா போஸ்
- அஸ்மிதா
- சுஷ்மிதா
- சென்னை
- எல்கிரி
- யார்தாடு
மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் ராஜகணபதி தயாரித்துள்ள ‘ஏ படம்’, வரும் 27ம் தேதி திரைக்கு வருகிறது. இதன் பர்ஸ்ட் லுக்கை தொல்.திருமாவளவன் வெளியிட்டார். கேஷ்லெஸ் ஷிவாகோ இயக்க, ஜோஸ் பிராங்க்ளின் இசை அமைத்துள்ளார். சதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கதையின் நாயகனாக ராஜகணபதி, நாயகியாக மேகா மற்றும் சந்திரபோஸ், கேஷ்லெஸ் ஷிவாகோ, அஸ்மிதா, சுஷ்மிதா நடித்துள்ளனர். சென்னை, ஏலகிரி, ஏற்காடு ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
படம் குறித்து ராஜகணபதி கூறுகையில், ‘இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வாங்கும்போது, 45க்கும் மேற்பட்ட காட்சிகளுக்கு ‘கட்’ கொடுத்தனர். இதனால் 18 மாதங்கள் வரை கோர்ட்டுக்கு அலைந்து, மிகவும் சிரமப்பட்டு தணிக்கை சான்றிதழ் வாங்கினோம். இதில் அம்பேத்கர் வேடத்தில் நடித்துள்ளேன். சமுதாயத்திலுள்ள அவலங்களை அம்பேத்கர் பேசுவது போல் நடித்த அனுபவத்தை மறக்க முடியாது. நல்ல படத்தை திரையரங்கில் பார்த்து ஆதரிக்க வேண்டுகிறேன். இதில் விவசாய புரட்சியையும், கார்ப்பரேட் கம்பெனிகள் விவசாய மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறது என்பதையும் அழுத்தமாக பதிவு செய்துள்ளேன்’ என்றார்.
