×

மை லார்ட் படம் கிட்னி திருட்டை தடுத்து நிறுத்தும்: சசிகுமார் நம்பிக்கை

 

சென்னை: எஸ்.அம்பேத்குமார் வழங்க, ஒலிம்பியா மூவிஸ் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம், ‘மை லார்ட்’. ராஜூ முரு​கன் எழுதி இயக்​கினார். சசிகுமார் ஜோடியாக சைத்ரா ஜே.ஆச்சார் நடித்தார். ஷான் ரோல்டன் இசை அமைத்தார். இப்படம் கிட்னி திருட்டை தடுக்கும் என்று சசிகுமார் சொன்னார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இப்படத்​தில் என்னை வேறொரு பரிமாணத்தில் மாற்றிக்காட்டிய ராஜூ முரு​கனுக்கு நன்றி.

எல்​லா​வற்​றை​யும் நான் பார்த்​துக்​கொள்​கிறேன் என்று சொல்லக்கூடிய தயாரிப்​பாளர் அம்​பேத்குமாருக்கு நன்றி. நல்ல இயக்​குனரும், நல்ல தயாரிப்​பாள​ரும் தோற்​றுப்போகக் கூடாது; அவர்கள் எப்​போதும் ஜெயிக்க வேண்​டும் என்​பது​ என் எண்​ணம். நான் நடித்து வெளியான ‘அயோத்தி’, ‘நந்தன்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்கள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த வரிசையில் ‘மை லார்ட்’ படமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, கிட்னி திருட்டை தடுத்து நிறுத்தும் என்று நம்புகிறேன். ஒரு படத்துக்கு புரமோஷன் என்பது தவிர்க்க முடியாத விஷயம்.

 

Tags : Sasikumar ,Chennai ,S. Ambedkumar ,Jayanthi Ambedkumar ,Olympia ,Raju Murugan ,Chaitra J. Achar ,Sean Roldan ,Ambedkumar ,
× RELATED சென்சாரில் 45 ‘கட்’ வாங்கிய ‘ஏ படம்’