×

பாசிட்டிவ் உணர்வுக்காக விஷாலுக்கு உடற்பயிற்சி சொல்லித் தரும் தன்ஷிகா

 

சென்னை: விஷாலுக்கு புதுவித உடற்பயிற்சி கற்றுக் கொடுத்து உதவியிருக்கிறார் சாய் தன்ஷிகா.விஷால், சாய் தன்ஷிகா கடந்த ஓராண்டாக காதலித்து வருகிறார்கள். இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டும் சாய் தன்ஷிகா, யோகா மற்றும் உடற்பயிற்சிகளில் அதிக கவனம் செலுத்துகிறார். இடையில் உடல் நலம் குன்றிய விஷாலுக்கும் அவர் சில பயிற்சிகளை சொல்லிக் கொடுத்தார். அதன்படி அந்த உடற்பயிற்சிகளை விஷால் தொடர்ந்து செய்து வருகிறாராம்.

முதல்முறையாக விஷாலே தான் செய்யும் உடற்பயிற்சி புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அப்பதிவில், ‘‘தலை முதல் கால் வரை மனதில் சமநிலை இருப்பது, உங்களைச் சுற்றி என்ன நடந்தாலும் உலகின் உச்சியில் இருப்பது போல் உணர வைக்கும். பாசிட்டிவிட்டி தொடரும், எனது உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி உலகின் இந்தப் பகுதியை அறிமுகப்படுத்தியதற்கு சாய் தன்ஷிகாவிற்கு நன்றி’’ எனக் குறிப்பிட்டுள்ளார். இப்புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags : Tanshika ,Vishal ,Chennai ,Chai Tanshika ,Sai Tanshika ,
× RELATED சென்சாரில் 45 ‘கட்’ வாங்கிய ‘ஏ படம்’