×

சம்பளத்தை உயர்த்திய சாய் பல்லவி

தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்துவிட்டு, தற்போது இந்தியில் நிதிஷ் திவாரி இயக்கத்தில் இரு பாகங்களாக உருவாகும் ‘ராமாயணா’ என்ற பான்வேர்ல்ட் படத்தில் சீதை வேடத்தில் நடித்து வரும் சாய் பல்லவி, ஆமிர் கான் மகன் ஜுனைத் கான் ஜோடியாக ‘ஏக் தின்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இது வரும் மே மதம் திரைக்கு வருகிறது. அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷின் 55வது படத்தில் சாய் பல்லவி ஒப்பந்தமாகியுள்ளார்.

இதே படத்தில் ஸ்ரீலீலாவும் நடிக்கிறார். இந்நிலையில், 10 கோடி ரூபாய் சம்பளம் கேட்டு தொல்லை செய்வதாக சாய் பல்லவி குறித்து கூறப்படுகிறது. அவரது திடீர் சம்பள உயர்வுக்கு ‘அமரன்’, ‘தண்டேல்’ ஆகிய படங்களின் வெற்றியும், அடுத்து வெளியாகும் ‘ராமாயணா’ என்ற படமும்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

Tags : Sai Pallavi ,Sita ,Nitish Tiwari ,Aamir Khan ,Junaid Khan ,Dhanush ,Rajkumar Periyasamy ,Srileela ,
× RELATED மீண்டும் கீது இயக்கத்தில் கியாரா