- சென்னை
- மலாலி மான்வி
- தயாரிப்பாளர்கள்
- டி ஸ்டுடியோஸ்
- சன்னி டென்வி புரொடக்ஷன்ஸ்
- பிரபா பிரேம்குமார்
- விஜய்
- ஹாரிஸ் ஜெயராஜ்
- மதும்கேஷ்
- ஜியா ஷங்கர்
- அர்ஜுன் அசோகன்
- எம். எஸ் பாஸ்கர்
- ஜெயப்பிரகாஷ்
- வி.ஜே. சந்திரசேகர்
- அரவிந்த் கிருஷ்ணா
- சரவணன் வசந்த்
சென்னை: மலாலி மான்வி மூவி மேக்கர்ஸ், டி ஸ்டுடியோஸ், சன்னி டென்வி புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம், ‘காதல் ரீசெட் ரிபீட்’. பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பு செய்ய, விஜய் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். புதிய பாணியில் அமைந்துள்ள காதல் கதையில் மதும்கேஷ், ஜியா சங்கர் ஜோடியுடன் அர்ஜூன் அசோகன், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர் நடித்துள்ளனர். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, சரவணன் வசந்த் அரங்கம் அமைத்துள்ளார். ஆண்டனி எடிட்டிங் செய்ய, மனோகர் வர்மா சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். வைரமுத்து, கார்கி, ஆர்கஸ் ஆர்யன் பாடல்கள் எழுதியுள்ளனர். இப்படத்தை வரும் மார்ச் 6ம் தேதி தமிழகம் முழுவதும் ரோமியோ பிக்சர்ஸ் திரையிடுகிறது.
