மலையாள நடிகை கீது மோகன்தாஸ், தமிழில் ‘நளதமயந்தி’, ‘பொய்’ ஆகிய படங்களில் நடித்தார். பிறகு மலையாளத்தில் மட்டும் நடித்து வந்த அவர், கடந்த 2009 முதல் நடிப்பில் இருந்து ஒதுங்கினார். பிறகு ‘லையர்ஸ் டைஸ்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, பிறகு ‘மூத்தோன்’ என்ற படத்தை இயக்கினார். தற்போது கன்னட நடிகர் யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
பான்வேர்ல்ட் படமாக உருவாகும் இதில் நயன்தாரா, ஹூமா குரேஷி, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மணி வசந்த் நடிக்கின்றனர். வரும் மார்ச் 19ம் தேதி திரைக்கு வருகிறது. ரவி பஸ்ரூர் இசை அமைக்கிறார். இந்நிலையில், பெண்களை மையமாக வைத்து அவர் இயக்கும் அடுத்த படத்தில், மீண்டும் கியாரா அத்வானியை நடிக்க வைப்பதாக கூறப்படுகிறது.
