×

அனஸ்வராவுடன் ஐக்கியமான அபிஷன் ஜீவிந்த்

சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெற்றிபெற்ற ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமான ‘வித் லவ்’ என்ற படம் வெற்றிபெற்றுள்ளது. இதையடுத்து படக்குழுவினரை அழைத்து ரஜினிகாந்த் வாழ்த்தினார். இதற்கான ஏற்பாடுகளை இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சவுந்தர்யா ரஜினிகாந்த் செய்திருந்தார். இந்நிலையில், இப்படத்தின் சக்சஸ்மீட்டில் பேசிய அபிஷன் ஜீவிந்த், ‘நான் ஹீரோவாக நடிக்கலாமா, வேண்டாமா என்று தீவிரமாக யோசித்தபோது, ரஜினி சார் கொடுத்த உற்சாகம்தான் என்னை ஒரு ஹீரோவாக்கியது. ரஜினி சாரை சந்தித்தபோது, ‘இப்ப நீங்களும் ஹீரோ ஆகிட்டீங்க’ என்று சிரித்தபடி சொல்லி பாராட்டினார். படத்தில் அனஸ்வரா ராஜனுக்கும், எனக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்அவுட்டானது. எல்லோரும் இதை ரசித்தனர்.

அவருடன் இணைந்து நடித்ததில் எனக்கு அதிக மகிழ்ச்சி. கண்டிப்பாக நானும், அவரும் நிறைய படங்களில் இணைந்து நடிப்போம். சவுந்தர்யா மேடம், ‘ஒரு சக்சஸ் என்றால் இப்படித்தான் இருக்குமா?’ என்று கேட்டார். எனக்கு சப்போர்ட் செய்து, என்னையும் ஒரு ஸ்டார் என்று நம்ப வைத்த அவருக்கு மனமார்ந்த நன்றி’ என்றார். அனஸ்வரா ராஜன் பேசுகையில், ‘தியேட்டரில் கிடைத்த ஆடியன்ஸின் கைத்தட்டல், ஆரவாரம் எல்லாம் எனக்கு அதிக சந்தோஷத்தை கொடுத்தது. ரஜினி சாரை நேரில் சந்தித்தபோது அவர் கொடுத்த உற்சாக வரவேற்பு எங்களுக்கு அதிக நம்பிக்கையை கொடுத்தது’ என்றார்.

Tags : Abhishan Jeevind ,Anaswara ,Sasikumar ,Simran ,Rajinikanth ,Soundarya Rajinikanth ,Rajini ,
× RELATED அஜித்துக்கு ரூ.30 லட்சம் கார் பரிசு