தமிழில் ‘விருமாண்டி’, ‘சமுத்திரம்’ போன்ற ஒரு சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடித்த அமிராமி 2009ல் ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு சினிமாவில் நடிப்பதை வெகுவாக குறைத்துக்கொண்ட அபிராமி தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2024ல் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ என்ற படத்தில் அனுராக் காஷ்யப் மனைவியாக நடித்திருந்தார். மேலும், தற்போது கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கிலும் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீப காலமாக அபிராமியின் தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அவர் உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலரும், ‘அபிராமியா இது, ஆளே மாறிவிட்டாரே, ஒருவேளை ஜீரோ சைஸ் உடல் அமைப்பை கொண்டுவரும் முயற்சியை அவர் மேற்கொண்டுள்ளாரா’ என கேட்டு வருகிறார்கள்.

