தனக்கு எதிரான ஆபாச குறுஞ்செய்தி, பாலியல் மிரட்டல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக நடிகை ரம்யா பெங்களூரு 42வது செஷன்ஸ் கோர்ட்டில் நேற்று ஆஜரானார். அதை முடித்தபிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், ‘‘நான் கொடுத்த வழக்கில் வாக்குமூலம் அளித்துள்ளேன். குற்றம் சாட்டப்பட்டவர்களை நேரில் பார்க்க எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. ஆனால் இது எனது தனிப்பட்ட நோக்கத்திற்காக தொடரப்பட்ட வழக்கு அல்ல.
பெண்களிடம் மோசமாக நடந்து கொள்பவர்களுக்கு சமூகத்தில் பயத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த வழக்கை தொடர்ந்தேன். குழந்தைகள் உள்பட பெண்களுக்கு எதிராக ஆபாசமாக கருத்துகளை பேசுவது, சோஷியல் மீடியாவில் தெரிவிப்பது என்பது பொதுவான விஷயம் அல்ல. இதுபோன்ற சம்பவங்களை அடிப்படையிலேயே தடுக்க வேண்டும். தடுக்காமல்விட்டால் எதிர்காலத்திலும் இதுபோன்ற செயல்கள் தொடரும். அதன் காரணமாகவே அனைத்து சிறுமிகள், பெண்களின் சார்பாக இந்த வழக்கை நான் தொடர்ந்தேன்” என்று கூறினார்.

