×

பெரிய ஹீரோக்கள் படத்துக்கு ரூ.2,000 என் படத்துக்கு ரூ.150: ராதிகா பேச்சு

சென்னை: பேஷன் ஸ்டுடியோஸ், சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, சிவக்குமார் முருகேசன் எழுதி இயக்க, ராதிகா நடித்து வெளியான ‘தாய் கிழவி’ என்ற படம், 50 கோடி ரூபாய் வசூலை கடந்து ஹிட்டாகியுள்ளது. இதையடுத்து நடந்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசுகையில், ‘இந்த படம் எனக்கு ஒரு குழந்தை. 48 வருட திரையுலக அனுபவத்தை பவுனுத்தாயி என்ற தாய் கிழவி கேரக்டருக்கு வழங்கி ராதிகா மேடம் உயிரூட்டியுள்ளார். எனது தந்ைத இறந்த பிறகு எனது அம்மா, வீட்டில் வைத்திருந்த பணத்தை வைத்து என்னையும், எனது அக்காவையும் நன்கு படிக்க வைத்து, பிறகு ஒவ்வொருவருக்கும் திருமணம் செய்து வைத்து ஆளாக்கினார். அவரும் ஒரு பவுனுத்தாயிதான். எனது அக்காவும், மனைவி ஆர்த்தியும் எனக்கு பவுனுத்தாயிதான்’ என்றார். ராதிகா பேசும்போது, ‘தமிழ் திரையுலகில் முதல்முறையாக ஹீரோயினுக்கு படத்தின் லாபத்தில் பங்குண்டு என்று தயாரிப்பாளர்கள் சொன்னார்கள். அந்த பெருமை எனக்கு வந்து சேர்ந்திருக்கிறது. பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு ரூ.2 ஆயிரம் டிக்கெட் விற்கிறார்கள். ஆனால் நாங்கள் நியாயமாக ரூ.150க்கு டிக்கெட் விற்று வெற்றி பெற்றுள்ளோம்’ என்றார்.

Tags : Radhika ,Chennai ,Fashion Studios ,Sivakarthikeyan Productions ,Sivakumar Murugesan ,Sivakarthikeyan ,Paunuthai ,
× RELATED பெண்களுக்கு ஆதரவாக நிற்கும் ரம்யா