×

வெஞ்சென்ஸ் : விமர்சனம்

கழ் போதையில் சிக்கிய அபர்ணதி, ஐஏஎஸ் படித்து மாவட்ட கலெக்டராகிறார். அரசியல்வாதிகளின் தில்லுமுல்லுகளை கண்டுபிடித்து, வானளாவிய அதிகாரத்தை செலுத்துகிறார். இதனால் சஸ்பெண்ட் செய்யப்படும் அவர், பொதுத் தேர்தலுக்கு பிரதமரால் தேர்தல் மேற்பார்வையாளராக நியமிக்கப்படுகிறார். முன்பு அவரை எதிர்த்த அரசியல்வாதிகள், இன்று அவரது உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டியிருக்கிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது, எதிர்பாராத கிளைமாக்ஸ். கலெக்டராக செம கெத்து காட்டி நடித்திருக்கும் அபர்ணதி, அரசியல்வாதிகளின் தோலை உரிக்கும் காட்சிகளில் கைத்தட்டல் பெறுகிறார். அவரது திரைப்பயணத்தில் இப்படம் ஒரு மைல் கல்.

அபர்ணதியின் புடவையை உருவி கொக்கரிக்கும் காட்சியில் சரவண சுப்பையாவின் வில்லத்தனம் மிரட்டல். ஜான் விஜய் வழக்கமான நடிப்பையே வெளிப்படுத்தி வெறுப்பை சம்பாதிக்கிறார். அபர்ணதி தந்தையாக காளி வெங்கட், தாய்நாடு முதலமைச்சராக இளவரசு, எதிர்க்கட்சி தலைவராக லிவிங்ஸ்டன் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி, டி.எம்.கார்த்திக், சச்சு, சைதன்யா, மங்கள், ரேகா நாயர், சம்யுக்தா ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர். பொலிட்டிகல் சட்டையர் கதைக்கேற்ற ஒளிப்பதிவை எம்.எஸ்.பிரபுவின் கேமரா வழங்கியுள்ளது. கார்த்திக்ராஜா இசை அமைக்க, ஒரிஜினல் பின்னணி இசையை அருண் ராஜ் அமைத்துள்ளார். எழுதி இயக்கிய ராகுல் அசோக், திரைக்கதையை எளிமையாக்கி சற்று புரியும்படி சொல்லியிருக்கலாம். 2வது பாகத்துக்கான லீட் கொடுத்துள்ளார்.

Tags : Aparnathi ,
× RELATED பெண்களுக்கு ஆதரவாக நிற்கும் ரம்யா