- ஐஸ்வர்யா அர்ஜுன்
- அர்ஜுன்
- ஐஸ்வர்யா
- உபேந்திரன்
- நிரஞ்சன் சுதீந்திரா
- பிரகாஷ் ராஜ்
- சத்யராஜ்
- கோவை சரளா
- மணி சந்தன
- சுமித்ரா
- போசானி கிருஷ்ணமூர்த்தி
- ஜபர்தஸ்த் ஃபானி
- நார்ரா ஸ்ரீனு
- மீன் வெங்கட்
- திருவ சர்ஜா
- அனூப் ரூபன்ஸ்
- கதலை

நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குனருமான அர்ஜூன், தற்போது தனது மகள் ஐஸ்வர்யாவை ஹீரோயினாக்கி, ‘சீதா பயணம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் கன்னட நடிகர் உபேந்திரா அண்ணன் மகன் நிரஞ்சன் சுதீந்திரா ஹீரோவாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் பிரகாஷ்ராஜ், சத்யராஜ், கோவை சரளா, மணி சந்தனா, சுமித்ரா, போசானி கிருஷ்ணமூர்த்தி, ஜபர்தஸ்த் ஃபனி, நர்ரா ஸ்ரீனு, ஃபிஷ் வெங்கட், கன்னட பட ஆக்ஷன் ஹீரோ துருவா சர்ஜா ஆகியோர் நடிக்கின்றனர்.
அனூப் ரூபன்ஸ் இசை அமைக்கிறார். காதலை மையப்படுத்திய இப்படம், வரும் பிப்ரவரி 14ம் தேதி திரைக்கு வருகிறது. முன்னதாக ‘பட்டத்து யானை’ உள்பட சில படங்களில் நடித்த ஐஸ்வர்யா அர்ஜூன், நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்கும் படம் என்பதால், ‘சீதா பயணம்’ படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இப்படத்தின் மூலம் அவர் கம்பேக் தருவார் என்று நம்பப்படுகிறது.

