
சமீபத்தில் தனது முதலாவது திருமண நாள் விழாவை, தனது காதல் கணவர் நவ்னீத் மிஸ்ராவுடன் இணைந்து புக்கட் தீவில் கொண்டாடி மகிழ்ந்த சாக்ஷி அகர்வால், இதற்கு முன்பு அளித்திருந்த ஒரு பேட்டியில், இயற்கையான முறையில் நமது முகத்தை எவ்வாறு பொலிவாக மாற்றலாம் என்று தெரிவித்துள்ளார். ‘ஃபேஸ்பேக்கை தயாரிக்க ரசாயனங்கள் எதுவும் சேர்க்க வேண்டியது இல்லை. அரிசி வடித்த கஞ்சியை பயன்படுத்த தொடங்கிய பிறகுதான் எனது சருமத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது. அரிசி வடித்த கஞ்சி ஆறியதும், அதை எடுத்து ஃப்ரிட்ஜில் சுமார் மூன்று முதல் நான்கு மணி நேரம் வைக்க வேண்டும்.
இப்படி வைக்கும்போது, கஞ்சி பார்ப்பதற்கு கெட்டியாக மாறி இருக்கும். இத்துடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை கலந்து முகத்தில் தடவலாம். சுமார் 10 அல்லது 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவலாம். இந்த ஃபேஸ்பேக்கை தொடர்ந்து பயன்படுத்தினால் முகம் பொலிவாக மாறிவிடும். நமது சருமம் ஆரோக்கியமாக இருக்கும். இதில் ரசாயனங்கள் இல்லாததால் ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகள் ஏற்படும் சாத்தியக்கூறுகளும் கிடையாது’ என்று, அழகு ரகசியம் குறித்து டிப்ஸ் கொடுத்துள்ளார்.
