×

ரச்சிதாவுக்காக மோதிக்கொண்ட இயக்குனர்கள்

சபரி, ரோகிந்த், ரச்சிதா மகாலட்சுமி, ஸ்வேதா, பவன் கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், ஸ்ரீலேகா, பி.எல்.தேனப்பன், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, சிங்கம்புலி, புஜ்ஜி பாபு, சாம்ஸ், அம்பானி சங்கர், முல்லை கோதண்டம் நடித்துள்ள படம், ‘99/66’. மித்ரா பிக்சர்ஸ் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி தயாரித்து நடித்துள்ளார். மற்றும் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை ஆகிய பொறுப்புகளையும் ஏற்றுள்ளார். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில், தமிழ்நாடு இயக்குனர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், ‘ரச்சிதா மகாலட்சுமியின் ரசிகன் நான். இப்படத்தின் தயாரிப்பாளர் என்னையும், பேரரசையும் மீண்டும் படம் இயக்க வைக்கிறேன் எனறு சொல்லியிருக்கிறார்.

நடிப்பு ராட்சசி ரச்சிதா மகாலட்சுமி கலக்கியிருக்கிறார்’ என்றார். அவருக்கு பதிலடி கொடுத்து பேசிய செயலாளர் பேரரசு, ‘ஆர்.வி.உதயகுமார் இயக்குனர் சங்க தலைவரா? இல்லை. ரச்சிதா மகாலட்சுமியின் ரசிகர் மன்ற தலைவரா என்று தெரியவில்லை. அந்தளவுக்கு தீவிர ரசிகராக இருக்கிறார். ரச்சிதா மகாலட்சுமி எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அப்படியே மாறிவிடுகிறார். அவருக்கு வாழ்த்துகள்’ என்றார். ஒரே சங்கத்தில் பதவி வகிக்கும் இரண்டு இயக்குனர்களும், நடிகர்களும், பாடலாசிரியர்களுமான பேரரசு, ஆர்.வி.உதயகுமார் இருவரும் மேடையில் மோதல் ஏற்படுவது போல் பேசியது சுவாரஸ்யமாக இருந்தது.

Tags : Rachita ,Sabari ,Rohind ,Rachita Mahalakshmi ,Swetha ,Pawan Krishna ,K.R. Vijaya ,K.S.G. Venkatesh ,Srilekha ,P.L. Thenappan ,S. Sneha ,Kumari Kanishka ,Singampuli ,Phujji Babu ,Sams ,Ambani Shankar ,Mullai Kothandam ,M.S. Moorthy ,Mithra Pictures ,Tamil Nadu Directors Association ,President ,R.V. Udayakumar ,
× RELATED போதை பொருள் வழக்கில் சிக்கி தலைமறைவு...