வேகமெடுக்கும் பாலா, சூர்யா படம்

பல வருடங்களுக்கு பிறகு பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்து வருகிறது. இதுவரை கண்டிராத முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் சூர்யா நடிக்க, ஜோடியாக டோலிவுட்டின் டாப் ஹீரோயின் கிரித்தி ஷெட்டி நடிக்கிறார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் மமிதா. இப்படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியெம் மேற்கொள்ள இசையமைக்கிறார் ஜி. வி. பிரகாஷ். 2டி என்டர்டயின்மண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிக்க ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன் இணைந்து தயாரிக்கிறார்.

இடையில் இந்த படப்பிடிப்பு பாலா, சூர்யா கருத்து வேறுபாடு காரணமாக நின்று விட்டதாக தகவல்கள் வெளியானது. இதனை சூர்யா மறுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் எழுதியுள்ளார். அது வருமாறு:  கன்னியாகுமரியில் துவங்கப்பட்ட முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, சிறு இடைவேளைக்கு பிறகு, விரைவில் துவங்கும் என குறிப்பிட்டுள்ளார்.  இதன் மூலம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: