மீண்டும் மாலத்தீவில் ரகுல்

ரகுல் ப்ரீத் சிங் ஏற்கனவே மாலத்தீவுக்கு சென்றிருந்தார். அங்கு சென்ற நடிகைகளின் பட்டியலில் முதலில் இருந்தவர் அவர்தான். அதன் பிறகே மற்ற நடிகைகள் அங்கு சென்று வந்தார்கள். தற்போது மீண்டும் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார் ரகுல். ஏற்கனவே பல சினிமா பிரபலங்கள் அங்குள்ள கடற்கரை மற்றும் ஸ்பாக்களில் தங்களுடைய நேரத்தை செலவிட்டு வரும் நிலையில் தற்போது ரகுல் ப்ரீத் சிங்கும் அங்குள்ள கடற்கரையில் தனது இனிமையான பொழுதை கழித்துவருகிறார். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத் சிங் ஏற்கனவே தெலுங்கு சினிமாவிலும் வரவேற்பு பெற்ற நடிகையாக வலம் வந்தார். இந்நிலையில் அவருக்கு ஹிந்தி திரைப்பட வாய்ப்புகள் குவிந்தன. அதைத் தொடர்ந்து அரை டஜன் திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். பாலிவுட்டில் ஜான் ஆப்ரஹாமுடன் இணைந்து இவர் நடித்துள்ள அட்டாக் படம் வரும் ஏப்ரல் 4ம் தேதி வெளியாகவுள்ளது. அதைத்தொடர்ந்து காண்டம் பரிசோதகராக இவர் நடித்திருக்கும் சத்ரிவாலி படம் ஏப்ரல் 5ம் தேதியும் அபிதாப் பச்சன் மற்றும் அஜய் தேவ்கனுடன் இவர் நடித்துள்ள ரன்வே 34 வரும் ஏப்ரல் 29ம் தேதியும் வெளியாகவுள்ளன. அதேபோல நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து இவர் தமிழில் நடித்திருக்கும் அயலான் படம் மே மாதம் வெளியாகிறது.

Related Stories: