×

ஐபிஎஸ் விமர்சனம்

 

மதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் போஸ் வெங்கட், வாகன பரிசோதனையின் போது தான் லஞ்சம் வாங்கியதை ஒரு இளைஞன் வீடியோ எடுத்ததாக சந்தேகப்பட்டு, அவனை லாக்கப்பில் வைத்து கடுமையாக தாக்குகிறார். இதில் அவன் மரணம் அடைகிறான். அவனது செல்போனில், முதலமைச்சர் ‘ஆடுகளம்’ நரேனின் சர்ச்சைக்குரிய வீடியோ இருப்பதை பார்த்து போஸ் வெங்கட் அதிர்ச்சி அடைகிறார். இளைஞனின் லாக்கப் மரணத்துக்கு காரணம் என்று, கால்டாக்சி டிரைவர் ‘ஆடுகளம்’ கிஷோரை கைது செய்கிறார். பிறகு ‘ஆடுகளம்’ கிஷோர், அவரது மனைவி அபிராமி, மகள், தங்கை குஷிதா கல்லபு ஆகியோரை ேபாலீசார் சித்திரவதை செய்கின்றனர்.

உயர் அதிகாரி ஹரீஷ் பெராடியின் மிரட்டலுக்கு பயந்து குற்றத்தை ஒப்புக்கொண்ட ‘ஆடுகளம்’ கிஷோர் என்ன ஆகிறார்? அவரது தங்கை குஷிதா கல்லபுவின் காதலர் டிடிஎஃப் வாசன் என்ன செய்கிறார் என்பது மீதி கதை.‘லாக்கப் டெத்’ என்ற உண்மை சம்பவ அடிப்படையில் படத்தை இயக்கிய கருணாநிதி, அதிகார வர்க்கத்தின் அராஜகம் சாமானிய மக்களை எப்படி வதைக்கிறது என்று சொல்லியிருக்கிறார். டிடிஎஃப் வாசன் ஹீரோ இல்லை. கதையின் நாயகனான ‘ஆடுகளம்’ கிஷோர், ேதர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அவரை போலீஸ் அடிப்பதை அறிந்து கலங்கும் அபிராமி, குஷிதா கல்லபு, மகள் ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர். ‘டிராபிக் ரூல்சை மதிக்க வேண்டும்’ என்று கருத்து சொல்லும் டிடிஎஃப் வாசன், பைக் சேஸிங்கில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். மற்றும் போஸ் வெங்கட், ஜான் விஜய், ஹரீஷ் பெராடி, ‘வத்திக்குச்சி’ திலீபன், ‘ஆடுகளம்’ நரேன், உமா பத்மநாபன், சிங்கம்புலி ஆகியோர், இயக்குனர் சொன்னதையே திரையில் பிரதிபலித்துள்ளனர்.

போலீஸ் சித்திரவதை மற்றும் பைக் சேஸிங் காட்சியில், ஒளிப்பதிவாளர் எஸ்.பிச்சுமணி பதற வைத்துள்ளார். அஸ்வின் விநாயகமூர்த்தியின் பின்னணி இசை ஓரளவு காப்பாற்றுகிறது. பொய்யான குற்றச்சாட்டால் நிரபராதி தண்டிக்கப்படுவதை ெசான்ன இயக்குனர் கருணாநிதி, பல காட்சிகளில் செயற்கைத்தனம்
தெரிவதை கவனித்து இருக்கலாம்.

 

Tags : IPS ,Madurai Police ,Inspector ,Bose Venkat ,Chief Minister ,Aadukalam' Naren ,Aadukalam' Kishore ,
× RELATED மாண்புமிகு பறை விமர்சனம்…