×

தமிழில் வெளியாகும் தெலுங்கு குஷி

2000மாவது ஆண்டில் விஜய் நடித்த குஷி படம் வெளிவந்தது. இதில் ஜோதிகா, மும்தாஜ் நடித்திருந்தார்கள், எஸ்.ஜே.சூர்யா இயக்கி இருந்தார். தற்போது இதே பெயரில் தெலுங்கில் ஒரு படம் தயாராகிறது. தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான புதிய படத்திற்கு, 'குஷி' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இதில் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா. உள்பட பலர் நடித்துள்ளனர். ஷிவா நிர்வாணா இயக்குகிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில்  இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதியன்று உலகம் முழுதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags :
× RELATED வீட்ல விசேஷம் - விமர்சனம்