×

பயணக் கதையில் சந்தானம்

'மேயாதமான்', 'ஆடை' ஆகிய படங்களை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் 'குலு குலு'. இந்தப் படத்தில் சந்தானம் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகைகள் அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.  சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் எஸ்.ராஜ் நாராயணன் தயாரித்திருக்கிறார். இந்த படம் ஒரு பயணக் கதை. அதில் காதலையும், காமெடியையும் இணைத்து சொல்கிறார்கள். இதில் சந்தானம் லாரி டிரைவராக நடித்துள்ளார். படம் வருகிற ஜூன் மாதம் வெளிவருகிறது.

Tags : Santhanam ,
× RELATED சாரநாதன் பொறியியல் கல்லூரியில் லக்ஷ்யா பல்சுவை நிகழ்ச்சி