×

கன்னித்தீவில் 4 ஹீரோயின்கள்

த்ரிஷா நடித்த கர்ஜனை படத்தை இயக்கிய சுந்தர் பாலு இயக்கியுள்ள படம் கன்னித்தீவு. இதில் வரலட்சுமி சரத்குமார், ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்‌ஷா என 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ராஜ் பிரதாப் இசை அமைத்துள்ளார், சிட்டி பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: என்னுடைய முதல் படம் கர்ஜனை. திரிஷா நடிப்பில் உருவான இப்படம் இன்னும் வெளியாகவில்லை. முதலில் இயக்குனராகி விட்டு பின்பு தான் தயாரிப்பாளார் ஆனேன். கன்னித்தீவு படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறேன். குறைவான நாட்களில் இப்படத்தை இயக்கிருக்கிறேன். ஒரு சமூக விரோத கும்பலிடம் மாட்டிக் கொள்ளும் 4 இளம் பெண்கள் அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள். என்பதுதான் படத்தின் கதை. என்றார்.

Tags : Virgin Island ,
× RELATED வீட்ல விசேஷம் - விமர்சனம்