×

தடகள வீரர்களுக்காக இணைந்த அருண் விஜய், விஷ்ணு விஷால்

சென்னை: சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான ‘Chennai District Masters Athletic Championship 2025’ தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நேற்று துவங்கியது. இப்போட்டியை சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் தலைவர் எம்.செண்பகமூர்த்தி, செயலாளர் ருக்மணி, பொருளாளர் சசிகலா மற்ற கமிட்டி உறுப்பினர்கள் சேர்ந்து கலந்து எடுத்த முடிவின் படி நடைபெற்றது.

மேகநாத ரெட்டி ஐஏஎஸ் இந்த போட்டியின் முதல் நாளை துவக்கி வைக்க, நடிகர் அருண் விஜய், நடிகர் விஷ்ணு விஷால், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் ஆர்.அர்ஜூன் துரை, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தலைவர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வென்றவர்களூக்கு பரிசுகள் வழங்கி விழாவை சிறப்பித்தனர்.

Tags : Arun Vijay ,Vishnu Vishal ,Chennai ,Chennai District Masters Athletic Championship 2025 ,Chennai District Senior Athletics Association ,Nehru Sports Stadium ,President ,M. Senbagamoorthy ,Rukmani ,Treasurer ,Sasikala ,Meganatha Reddy ,IAS ,
× RELATED டியர் ரதி பிரச்னையில் சிக்கும் டேட்டிங் ஜோடி