×

நட்டி, ராம்கி இணையும் படம்

எஸ்.ஜே.எஸ். பிரண்ட்ஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் சாய் சரவணன்  தயாரிக்கும் படத்தில் நட்டி நடராஜ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கர்ணன் படத்திற்கு பிறகு அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம்  இது. பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கே.பி.தனசேகர் இயக்கி தமிழ்த்திரையுலகிற்கு புதிய இயக்குனராக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் ராம்கி நடிக்கிறார். முன்னணி கதாநாயகிகளில் ஒருவரை நாயகியாக நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடந்துவருகிறது. மற்றும் இந்தப் படத்தில் மனோபாலா ரவிமரியா மொட்டை ராஜேந்திரன் ஜார்ஜ் சஞ்சனா சிங், அஸ்மிதா  ரேகா சுரேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர். தேவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். சத்யதேவ் இசை அமைக்கிறார். தமிழ்நாடு, கேரளா, அந்தமான் பகுதிகளில் படமாகிறது.

Tags : Natty ,Ramki ,
× RELATED நிறம் மாறும் உலகில் படத்தில் 4 ஹீரோக்கள்