×

சென்னை கோயிலில் ஜான்வி கபூர் தரிசனம்

சென்னை: பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் சென்னையில் உள்ள முப்பாத்தம்மன் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், ‘முதன்முறையாக முப்பாத்தம்மன் கோயிலுக்கு வந்தேன். சென்னையில் அம்மாவுக்கு மிகவும் பிடித்த இடம் இது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கோயில் வாசல் முன்பு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் டி20 தொடரின் இறுதிப்போட்டியைக் காண ஜான்வி கபூர் சென்னை வந்தார். அதன் பிறகு கோயிலுக்குச் சென்று வழிப்பட்டுள்ளார். தொடர்ந்து தேவரா தெலுங்கு படத்தின் படப்பிடிப்புக்காக அவர் ஐதராபாத் செல்கிறார்.

 

The post சென்னை கோயிலில் ஜான்வி கபூர் தரிசனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Janhvi Kapoor ,Chennai Temple ,Chennai ,Muppattamman temple ,Muppattaman Temple ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஜூனியர் என்டிஆர்-பிரசாந்த் நீல் இணையும் படம்: அறிவிப்பு வெளியானது