×

கவலைகள் போக்கும் மாகாளி

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் உள்ள வடாரண்யேஸ்வரர், வண்டார்குழலி ஆலயத்தில் மாகாளி, காளி சக்தி பீட நாயகியாய் அருள்கிறாள். தல விருட்சமாக பலா மரமும் தல தீர்த்தமாக முக்தி தீர்த்தமும் உள்ளன.  நடராஜப்பெருமான் நித்தமும் நடமாடும் பஞ்ச சபைகளுள் இது ரத்தின சபை. நடனக்கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவர்கள் வணங்க வேண்டிய தலம். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமையை பலப்படுத்தும் தலம்.  ஈசனிடம் போட்டி தாண்டவமாடிய காளி, ஈசனைப் போன்ற தாண்டவத்தை தன்னால் ஆட இயலாது என தோற்று விடுகிறாள்.

அப்போது காளியின் முன் இறைவன் தோன்றி, ‘என்னையன்றி உனக்கு சமமானவர் வேறு யாரும் கிடையாது. எனவே இத்தலத்திற்கு வருபவர்கள், முதலில் உன்னை வழிபட்டபின் என்னை வழிபட்டால் தான் முழு பலன் கிடைக்கும்,’ என்று வரமளித்தார். அன்றிலிருந்து காளி தனி கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள். பரணி நட்சத்திரக்காரர்கள் கட்டாயம் ஒரு முறையேனும் தரிசிக்க வேண்டிய தேவி இவள்.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?