×

உண்மை சம்பவங்கள் ரசிகர்களுக்கு பிடிக்கும்: கே.பாக்யராஜ் பேச்சு

சென்னை: எஸ்.கார்த்தீஸ்வரன் ஹீரோவாக நடித்து இயக்கிய படம், ‘நிர்வாகம் பொறுப்பல்ல’. மற்றும் லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, ராணா, ஆதவன், அகல்யா வெங்கடேசன், ஸ்ரீநிதி நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். ஆர்.கே ட்ரீம் பேக்டரி சார்பில் டி.ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ளார்.

கே.எம்.பி புரொடக்‌ஷன்ஸ், எஸ்.பி.எம் ஸ்டுடியோஸ் சார்பில் எம்.புவனேஸ்வரன், சி.சாஜூ, ஜோதிலட்சுமி இணை தயாரிப்பு செய்துள்ளனர். சோரியன் மீடியா எண்டர்டெயின்மெண்ட், வரும் டிசம்பர் 5ம் தேதி வெளியிடுகிறது. இந்த படத்துக்கான நிகழ்ச்சியில் கே.பாக்யராஜ் பேசுகையில், ‘மோசடிகள் இங்கு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நடக்கிறது.

கதை என்ன என்று இயக்குனரிடம் கேட்டபோது, ‘நான் ஏமாற்றப் பட்டேன். அதனால், மற்றவர்களை ஏமாற்ற நினைத்தேன். இதுதான் கதை’ என்றார். அதாவது, முள்ளை முள்ளால் எடுக்கும் விஷயம் இது. சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்புகிறேன்.‌ உண்மை சம்பவத்தை படமாக்கும்போது, கண்டிப்பாக அது ரசிகர்களுக்கு பிடிக்கும்’ என்றார்.

Tags : K. Bhagyaraj ,Chennai ,S. Karthieswaran ,Livingston ,Iman Annachi ,Black Pandi ,Rana ,Aadhavan ,Akalya Venkatesan ,Srinidhi ,Srikanth Deva ,D. Radhakrishnan ,RK Dream Factory ,M. Bhuvaneswaran ,C. Saju ,Jyothilaxmi ,KMP Productions ,SPM Studios ,Sorion Media Entertainment ,
× RELATED மாண்புமிகு பறை விமர்சனம்…