×

மாதவனுக்கு மனைவியின் அறிவுரை

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதையாக ராக்கெட்ரி படத்தை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் இயக்கி நடித்துள்ளார் மாதவன். இந்த படம் அடுத்த ஆண்டு திரைக்கு வருகிறது. தி ரயில்வே மேன் என்ற வெப்சீரிஸிலும் நடித்து வருகிறார். தமிழில் புதிய பட வாய்ப்பு எதையும் அவர் ஏற்கவில்லை. இந்நிலையில் இன்ஸ்டாகிராம், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆர்வத்துடன் பதிவுகளை வெளியிட்டு வருகிறார் மாதவன். இப்படித்தான் தனது இன்ஸ்டாகிராமில் தூங்கி எழுந்தவுடன் சட்டையில்லாமல் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் இந்த புகைப்படம் குறித்து தனது மனைவி, ‘வயதுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளுமாறு தன்னிடம் தெரிவித்ததாகவும், நான் ஏன் அந்த புகைப்படத்தை பதிவு செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை’ என்றும் மாதவன் கூறியுள்ளார்.

Tags : Madhavan ,
× RELATED காதலிக்க வலியுறுத்தி பெண்ணின் வீடு புகுந்து ரகளை: வாலிபர் கைது