கூகுள் தேடலில் முதலிடம் பிடித்த ஜெய் பீம் திரைப்படம்

சூர்யா நடிப்பில் வெளியான படம் ஜெய்பீம். இதனை த.செ.ஞானவேல் இயக்கி இருந்தார். இதனை சூர்யா, ஜோதிகா இணைந்து தயாரித்திருந்தனர். இந்த படம் பலத்த எதிர்ப்புக்கு இடையில் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதற்கிடையில் கூகுள் தேடலில் முதல் இடத்தை பெற்றுள்ளது. கூகுள் நிறுவனம் அதிகமாக தேடப்படும் இந்திய திரைப்படங்களை பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடும். இந்த வகையில் இந்து ஆண்டு வெளியான படங்களை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் சூர்யாவின் ஜெய் பீம் முதலிடத்தை பிடித்துள்ளது. 2ம் இடத்தில் தமிழ் இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கிய பாலிவுட் படமான ஷேர்ஷா உள்ளது.

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்த ராதே என்கிற இந்தி படம் மூன்றாம் இடத்திலும், அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியான் பெல் பாட்டம் 4வது இடத்தையும் பிடித்துள்ளது. எட்டர்னல்ஸ் ஹாலிவுட் படம் 5வது இடத்திலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் 6வது இடத்தையும் பிடித்துள்ளது.

Related Stories: