முகக்கவசத்தை கழற்ற சொல்வதா? போட்டோகிராபர்களை கடிந்துகொண்ட நடிகை ஜான்வி

மும்பை: தயாரிப்பாளர் போனி கபூர், மறைந்த நடிகை ஸ்ரீதேவி தம்பதிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஜான்வி கபூர் பாலிவுட் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அடிக்கடி அவர் வெளியிடும் கிளாமர் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் பல்வேறு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த போனி கபூர் மற்றும் ஜான்வி கபூரை போட்டோகிராபர்கள் சூழ்ந்துகொண்டு போட்டோ எடுத்தனர். அப்போது போனி கபூரும், ஜான்வி கபூரும் முகக்கவசம் அணிந்திருந்ததால், அவர்கள் தங்கள் முகக்கவசத்தை நீக்கிவிட்டு போஸ் கொடுக்க வேண்டும் என்று போட்டோகிராபர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று உடனே போனி கபூர் தன் முகக்கவசத்தை கழற்றினார்.

அதற்கு ஜான்வி கபூர், ‘முகக்கவசத்தை கழற்ற வேண்டாம்’ என்று தந்தைக்கு அறிவுறுத்தினார். அதை ஏற்றுக்கொண்ட போனி கபூர், மீண்டும் முகக்கவசத்தை மாட்டிக்கொண்டார். இதையடுத்து போட்டோகிராபர்களிடம் கோபமாகப் பேசிய ஜான்வி கபூர், ‘முகக்கவசத்தை நீக்கி போஸ் கொடுக்கும்படி ஏன் வற்புறுத்துகிறீர்கள்? இதுபோன்ற தவறான வேண்டுகோளை எங்கள் முன் வைக்க வேண்டாம்’ என்று சொல்லிவிட்டு, தந்தையை அழைத்துக்கொண்டு வேகமாக கிளம்பினார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Related Stories:

More
>