×

சினிமாவில் 9 ஆண்டுகளை நிறைவு செய்த சிவகார்த்திகேயன்..! கொண்டாடும் ரசிகர்கள்

தமிழ்த் திரையுலகில் தற்போதுள்ள முன்னணி ஹீரோக்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். 9 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் வெளிவந்த மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். 2013ம் ஆண்டு வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மாபெரும் வெற்றி சிவகார்த்திகேயனை அப்படியே முன்னணிக்குக் கொண்டு வந்தது.

அதன்பின் அவர் நடித்து வெளிவந்த ரெமோ, வேலைக்காரன், சீமராஜா மிகச் சுமாரான வெற்றி பெற்றாலும், பின்னர் வந்த மிஸ்டர் லோக்கல் தோல்வியடைந்தாலும் அவற்றை நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் வெற்றி மாற்றியது. ஹீரோ படத்தில் கொஞ்சம் சறுக்கினாலும் அடுத்து மார்ச் 26ல் வெளிவர உள்ள டாக்டர் காப்பாற்றிவிடுவார் என்ற நம்பிக்கையும் உள்ளது.  

எந்தவிதமான சினிமா பின்னணி இல்லாமல் தனது சுய திறமையால் முன்னேறி டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, நூற்றுக்கணக்கான டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகப் பணியாற்றி, சினிமாவுக்குள்ளும் நுழைந்து அவர் பெற்றிருக்கும் வெற்றி சாதாரணமானதல்ல. திறமையும், முயற்சியும் இருந்தால் சாதிக்கலாம் என்பதற்கு சினிமாவில் சிறந்த உதாரணம் சிவகார்த்திகேயன். அந்த நம்பிக்கை அடுத்த பல சிவகார்த்திகேயன்கள் சினிமாவை நோக்கி பயணிக்க காரணமாக அமைந்துள்ளது.

Tags : Sivakarthikeyan ,fans ,
× RELATED குரங்கு பெடல் வெளியிடும் சிவகார்த்திகேயன்