விவசாயிகள் போராட்ட விவகாரம்: பிரியங்கா சோப்ரா மீது கங்கனா தாக்கு

விவசாயிகள் போராட்டம் குறித்து கங்கனா ரனவத் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: நாட்டு மக்களிடம் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன். ஒட்டு மொத்த விவசாயிகள் போராட்டமும் எதிர்க்கட்சிகளால் தூண்டிவிடப்பட்டுள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. பயங்கரவாதிகளும் இதில் பங்கெடுக்க தொடங்கியுள்ளனர். நான் படித்தது, வளர்ந்தது எல்லாம் பஞ்சாப் மாநிலத்தில்தான். அங்கிருக்கும் 99 சதவீத மக்கள் காலிஸ்தானை விரும்பவில்லை. நாட்டை நேசிக்கிறார்கள்.

அந்நியர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நாம் பலவீனமாகிவிட்டோமா? ஒவ்வொரு நாளுமே எனது கருத்துகளுக்கு நான் விளக்கம் சொல்லிக் கொண்டு இருக்க முடியுமா? இத்தனைக்கும் நான் ஒரு தேசப்பற்றாளர். ஆனால், திலிஜித் தோசான்ஜ் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் செய்துகொண்டிருப்பது என்ன? ஏன் அவர்களை யாரும் கேள்வி கேட்பதில்லை. நாட்டுக்காக நான் செய்வது அரசியல் என்றால், அவர்கள் செய்வது என்ன என கேளுங்கள். விவசாயிகள் போராட்டத்தை தூண்டிவிடும் செயல்களில் பிரியங்கா சோப்ரா ஈடுபடுகிறார். இது அவருக்கு அழகல்ல. இவ்வாறு கங்கனா ரனவத் கூறியுள்ளார். சமீபத்தில் டிவிட்டரில், விவசாயிகள் போராட்டத்துக்கு மத்திய அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என பிரியங்கா சோப்ரா வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>