×

பெருமாள் முருகனின் சிறுகதை படமாகிறது

சென்னை: எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்ற சிறுகதையின் தழுவலே ‘அங்கம்மாள்’ திரைப்படம். முதன்மை கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்திருக்கிறார். இவருடன் சரண், பரணி, முல்லையரசி மற்றும் தென்றல் ரகுநாதன் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம், என்ஜாய் பிலிம்ஸ் மற்றும் ஃபிரோ மூவி ஸ்டேஷன் ஆகியவற்றுடன் இணைந்து, ‘அங்கம்மாள்’ படத்தை வெளியிடுகின்றனர். இந்தப் படத்தை எஸ். கார்த்திகேயன், பிரோஸ் ரஹீம் மற்றும் அஞ்சோய் சாமுவேல் தயாரித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அஞ்சோய் சாமுவேலின் ஒளிப்பதிவு செய்கிறார். முகமது மக்பூல் மன்சூரின் இசை அமைக்கிறார். விபின் ராதாகிருஷ்ணன் இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.

Tags : Perumal Murugan ,Chennai ,Geetha Kailasam ,Saran ,Barani ,Mullaiarasi ,Thentral Raghunathan ,Stone Bench Films ,Enjoy Films ,Fro Movie Station ,S. Karthikeyan ,Piros Rahim ,Anjoy Samuel ,
× RELATED ரிஜிஸ்டர் ஆபீசில் திருமணம் செய்துகொள்வேன்: ஸ்ருதி ஹாசன் அதிரடி