×

துணை நடிகையிடம் பாலியல் துன்புறுத்தல்: பாலிவுட் நடிகர் கைது

துணை நடிகையிடம் தவறாக நடந்து கொண்ட பாலிவுட் நடிகர் கைது செய்யப்பட்டார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான காக்கி சட்டை படத்தில் வில்லனாக நடித்தவர் விஜய் ராஸ். 57 வயதான இவர், பாலிவுட்டில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். க்யா தில்லி க்யா லாகூர் என்ற இந்தி படத்தை இயக்கியும் இருக்கிறார்.

விஜய் ராஸ், தற்போது ஷெர்னி என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றார். மகாராஷ்டிரா மாநிலம், பாலகாட்டில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது. அப்போது படப்பிடிப்பில் இருந்த துணை நடிகையிடம் பாலியல் ரீதியாக விஜய் ராஸ் தவறாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக அந்த துணை நடிகை போலீசில் புகார் அளித்தார். படப்பிடிப்பு தளத்துக்கு வந்த ராம்நகர் போலீசார், விஜய் ராஸை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Tags : actor ,actress ,
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்...