×

மூணாறில் காட்டுயானைகள் உலா-தொழிலாளர்கள் அச்சம்

மூணாறு : மூணாறில் காட்டுயானைகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.கேரள மாநிலம், மூணாறு அருகே கன்னிமலை டாப் டிவிஷன், லட்சுமி எஸ்டேட் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக காட்டுயானைகள் குட்டியுடன் கூட்டமாக சுற்றி திரிந்து வருகிறது. கடந்த 7ம் தேதி மாலை 3 மணியளவில் பெரியவாரை சாலையில் உள்ள குடியிருப்பு அருகே சாலையில் இறங்கிய காட்டுயானைகள் கூட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளை வனத்திற்குள் விரட்டி போக்குவரத்தை சீரமைத்தனர். அதேபோல் மூணாறு அருகே கன்னிமலை எஸ்டேட் டாப் டிவிஷனில் இரண்டு குட்டிகள் உட்பட நான்கு காட்டுயானைகள் கூட்டம் பகலிரவு பாராமல் சுற்றித் திரிகின்றன. இந்த யானைகள் கூட்டமாக பகல் நேரங்களில் தேயிலைத் தோட்டங்களிலும், சாலைகளிலும் வலம் வருகின்றன. இதனால் தொழிலாளர்கள், பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. காட்டுயானைகள் தொல்லையால பெரும்பாலான எஸ்டேட் பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் பல தலைமுறைகளாக வீடுகளுக்கு அருகில் பயிரிட்டு வந்த காய்கறி விவசாயத்தை முற்றிலுமாக கைவிட்டுள்ளனர்….

The post மூணாறில் காட்டுயானைகள் உலா-தொழிலாளர்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Moonaru ,Kerala State ,Moonamur ,Dinakaran ,
× RELATED கோடை மழையில் பூத்து குலுங்கும் ஈஸ்டர் லில்லி