×

மமிதாவுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

 

‘பிரேமலு’, ‘ரெபல்’, ‘டியூட்’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் குடியேறிய மமிதா பைஜூ கூறுகையில், ‘இந்த தீபாவளி பண்டிகையை மறக்க முடியாததாக மாற்றியுள்ளது, ‘டியூட்’ படத்தின் மிகப்பெரிய வெற்றி மற்றும் வசூல் நிலவரம். ஹீரோ பிரதீப் ரங்கநாதன், எனக்கு அப்பாவாக நடித்த சரத்குமாரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். என் சிறுவயதில் இருந்தே சினிமா மீது அதிக ஆர்வம் இருந்தது. நிறயை படங்களை பார்த்து கதை சொல்வேன். ஆனால், பெற்றோர் என்னை ஒரு டாக்டராக்க விரும்பினர்.

‘பிரேமலு’, ‘சூப்பர் சரண்யா’ ஆகிய படங்கள் என் இதயத்துக்கு மிகவும் நெருக்கமானது. எனது திரைப்பயணத்தில் மறக்க முடியாத மைல் கற்கள். நான் தமிழில் ‘ஜன நாயகன்’, ‘இரண்டு வானம்’, ‘தனுஷ் 54’, ‘சூர்யா 46’, மலையாளத்தில் ‘பெத்லேகம் குடும்ப யூனிட்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். தமிழ் படவுலகில் பல திறமையான நடிகர்கள், இயக்குனர்கள் இருக்கின்றனர். அவர்கள் மீது எனக்கு அதிக மரியாதை இருக்கிறது. ஒவ்வொருவரும் தனித்துவமான படைப்பை கொடுக்கின்றனர். அதை பார்த்து நான் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன்.

தமிழ் ரசிகர்கள் எனக்கு அதிக வரவேற்பு கொடுத்து, அன்பு மற்றும் பாசத்தை வாரி வழங்குகின்றனர். இவ்வளவு பெரிய திரையுலகில் நானும் ஒரு பகுதியாக இருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். இது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று நம்புகிறேன்’ என்றார்.

Tags : Mamita ,Mamita Baiju ,Diwali festival ,Pradeep Ranganathan ,Sarathkumar ,
× RELATED ரிஜிஸ்டர் ஆபீசில் திருமணம் செய்துகொள்வேன்: ஸ்ருதி ஹாசன் அதிரடி