×

ராஜமவுலி படத்தில் அலியாவுக்கு பதில் பிரியங்கா

ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகி வருகிறது. இதில் ராம்சரணுக்கு ஜோடியாக நடிக்க அலியா பட் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எதுவும் இதுவரை படமாக்கவில்லை. இந்நிலையில் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு நெப்போடிசம் முக்கிய காரணம் எனக் கூறி, ரசிகர்கள் பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர். இதில் வாரிசு நடிகர், நடிகைகள் பலரையும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அலியா பட், வாரிசு நடிகை என்பதால் அவரையும் நெட்டிசன்கள் தாக்கி வருகின்றனர். 

இந்நிலையில் அவர் நடித்துள்ள சடக் 2 இந்தி படத்தின் டிரெய்லர் 6 மில்லியன் டிஸ்லைக்குகளை பெற்றது. இந்த படம் வெளியாகும்போது அதை புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இதனால் ஆர்ஆர்ஆர் படத்துக்கும் பாதிப்பு வரலாம் என ராஜமவுலி யோசிக்கிறாராம். எனவே அலியா பட்டுக்கு பதிலாக பிரியங்கா சோப்ராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.

Tags : Priyanka ,Alia ,
× RELATED உன் சகோதரியாக இருப்பது பெருமை...