×

12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி

சென்னை: ‘பக்ரீத்’ படத்தின் வெற்றிக்கு பிறகு ஜெகதீசன் சுப்பு இயக்கும் படம் ‘தோனிமா’. இதில் காளி வெங்கட், ரோஷிணி பிரகாஷ், விஷ்வ ராஜ், விவேக் பிரசன்னா, பி.எல்.தேனப்பன் உள்பட பலர் நடிக்கிறார்கள். கூழாங்கல் படத்தை தயாரித்த லியர்ன் அண்ட் டீச் புரொடக்‌ஷன் சார்பில் சாய் வெங்கடேஸ்வரன் தயாரிக்கிறார். இ.ஜே.ஜான்சன் இசை. பாக்யராஜ், சாஜித் குமார் ஒளிப்பதிவு. எடிட்டிங் தமிழரசன்.

பாலாவின் வணங்கான் படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் ரோஷிணி பிரகாஷ்தான் இதிலும் ஹீரோயின். இதில் அவர் 12 வயது சிறுவனுக்கு அம்மாவாக நடிக்கிறார். படம் குறித்து இயக்குனர் ஜெகதீசன் சுப்பு கூறியது: பக்ரீத் படத்தில் ஒரு குடும்பம், ஒரு ஒட்டகம் சுற்றி நடக்கும் கதையை சொன்னேன். இதில் ஒரு குடும்பம், ஒரு நாய்க்குட்டியை சுற்றி நடக்கும் கதையை சொல்கிறேன். விலங்குகள் மீது எனக்கு தனிப்பிரியம் உண்டு. அதனால்தான் விலங்கை மையப்படுத்தி உணர்வுபூர்வமான கதையை சொல்கிறேன்.

காளி வெங்கட், ரோஷிணி தம்பதியின் மகனாக விஷ்வ ராஜ் நடித்திருக்கிறார். மகனுக்கு காது ஆபேரஷன் செய்வதற்காக அல்லல்படும் அம்மாவாக ரோஷிணி நடித்துள்ளார். காளி வெங்கட் கிரிக்கெட் வெறியர். அதனால் மகனுக்கு டிராவிட் என பெயர் வைத்திருப்பார். இவர்களுக்கு ஒரு நாய்க்குட்டி கிடைக்கிறது. அது பெண் நாய்க்குட்டி என்பதால் அதற்கு தோனிமா என காளி வெங்கட் பெயர் வைக்கிறார். விலங்கு மீதான பாசத்தையும் மனிதர்களின் உணர்வுகளையும் சொல்லும் படமாக இது இருக்கும். ஆகஸ்ட்டில் ரிலீசாகிறது.

 

The post 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Roshini ,Chennai ,Jagatheesan Subbu ,Kali Venkat ,Roshini Prakash ,Vishwa Raj ,Vivek Prasanna ,PL Thenappan ,Learn and Teach Production ,Kuzhangal ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கருடன் – திரை விமர்சனம்