×

பேய்களுக்கு நடுவில் இருக்கிறேன்; பிரியா பவானி லக லக

‘மான்ஸ்டர்’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தவர் பிரியா பவானி சங்கர். அடுத்து பொம்மை படத்தில் மீண்டும் எஸ்.ஜே.சூர்யாவுடனே நடிக்கிறார். இந்நிலையில் இருவரும் காதல் கிசுகிசுவில் சிக்கினர். பிரியாவிடம் சூர்யா காதலைச் சொல்ல அவர் அதை ஏற்கவில்லை என்று தகவல் பரவியது. ஆனால் இதை சூர்யாவும், பிரியாவும் மறுத்தனர்.

மேலும் தனக்கு பாய்பிரண்ட் இருப்பதாக பிரியா தெரிவித்திருந்தார். சமீபத்தில் பிரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரமாண்ட சேரில் அமர்ந்திருப்பதுபோலவும், அம்யூஸ்மென்ட் பார்க் (பொழுதுபோக்கு பூங்கா) ஒன்றில் அமர்ந்திருப்பது போலவும் புகைப்படங்கள் வெளியிட்டு, ‘இங்குதான் எல்லா பேய்களும் இருக்கின்றன’ என மெசேஜ் பதிவிட்டிருந்தார்.

அதைப் பார்த்த ரசிகர்கள், ‘எந்த பேய்களை சொல்கிறீர்கள்?’ என கமென்ட் பகிர்ந்தனர். இன்னும் சிலரோ,  ‘இவர் சென்ற அம்யூஸ்மென்ட் பார்க்கில் ஹாலிவுட் படத்தில் வரும் பேய்களின் உருவ பொம்மைகள் இருந்திருக்கும் அதைத்தான் இப்படிச் சொல்கிறார்’ என பதில் அளித்துள்ளனர்.

Tags : Priya Bhavani World ,
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!