×

மீண்டும் வெள்ளித்திரையில் ஐரா அகர்வால்

சென்னை: ‘காட்டுப் பய சார் இந்த காளி’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர், ராஜஸ்தான் மாடல் ஐரா அகர்வால். பிறகு சினிமா வாய்ப்பு இல்லாமல் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த அவர், தற்போது ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் சினிமா பக்கம் திரும்பி நடிக்க தொடங்கியுள்ளார்.

திவ்ய சேத்ரா பிலிம்ஸ் சார்பில் நிர்மலா ராஜன், சி.ஆர்.ராஜன் தயாரிக்கும் ‘அமரம்’ என்ற படத்தில் ராஜன் தேஜேஸ்வர் ஹீரோவாகவும், ஐரா அகர்வால் ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். மிக்கி ஜெ.மேயர் இசை அமைத்துள்ளார். பரத்குமார், கோபிநாத் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி திரு அருள் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இப்படம் மூன்று காலகட்டங்களில், மூன்று நிலப்பகுதிகளில் நடக்கும் ஒரு அமர காதல் கதையாக ஆக்‌ஷன் கலந்து உருவாகிறது.

Tags : Aira Agarwal ,Chennai ,Rajan Tejeshwar ,Nirmala Rajan ,C.R. Rajan ,Divya Sethra Films ,Mickey J. Meyer ,
× RELATED மாண்புமிகு பறை விமர்சனம்…