×

மைக்கேல்பட்டி ராஜா

ஸ்பெல் பவுண்ட் பிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் எஸ்.பிரான்ஸிஸ் இயக்கத்தில் முழுக்க முழுக்க அரபு நாட்டில் படமாக்கப்படும் படம் மைக்கேல்பட்டி ராஜா. அரபு நாட்டுக்கு வேலைக்காக செல்லும் கதாநாயகன், ஒரு அரபு பெண்ணால் ஈர்க்கப்படுகிறான். அதே சமயம், தமிழ் தெரிந்த ஒரு அரபி பேய் அவனைத் துரத்துகிறது. பேயிடம் இருந்து தப்பித்தானா, காதல் என்ன ஆனது என்பதை காமெடியாக சொல்கிறது படம்.

இப்படத்தில் நிகேஷ் ராம் ஜோடியாக அறிமுக நாயகி பெர்லின் நடித்திருக்கிறார். மேலும், கோவை சரளா, கௌசல்யா, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, ரவி மரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மனோஜ் பிள்ளை ஒளிப்பதிவு, ராஜா முகம்மது படத்தொகுப்பு. இசை சுதீப் பலனாட் - அஸ்வமித்ரன். கபிலன் வைரமுத்து, மோகன் ராஜ் பாடல்கள்.

Tags : King ,
× RELATED சவுதி மன்னர் சல்மான் மருத்துவமனையில் அட்மிட்