×

தயாரிப்பாளருடன் மோதும் பரத்

தயாரிப்பாளருடன் மோதும் அளவுக்கு பரத்துக்கு என்ன பிரச்னை என்று யோசிக்கத்தோன்றும். ஆனால் இந்த மோதல் படத்தை தரமான தாக்க நடந்த மோதல்தான். ராஜீவ் மேனனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய சுனிஷ் குமார் இயக்கும் படம் லாஸ்ட் 6 ஹவர்ஸ். இப்படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: வெவ்வேறு துறையை சேர்ந்த நான்கைந்து பேர் பெரிய திருட்டு நடத்தி வாழ்க்கையில் செட்டில் ஆக நினைக்கிறார்கள். திருட்டை நடத்தி முடிக்க 6 மணி நேரம் மட்டுமே கிடைக்கிறது. துணிந்து கொள்ளை நடத்த முயலும்போது எதிர்பாராத சம்பவம் அவர்களை இக்கட்டில் சிக்க வைக்கிறது.

அதிலிருந்து மீள்கிறார்களா என்பதை சஸ்பென்ஸ் த்ரில்லருடன் படம் கூறுகிறது. இப்படத்துக்காக பரத் கட்டுக்கோப்பான உடற்கட்டுக்கு மாறினார். அவருக்கு வில்லனாக நடிக்கிறார் அனூப் காலித். இவரே படத்தையும் தயாரிக்கிறார். இருவருக்கும் கடுமையான மோதல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. விவியா சனத், அடில் இப்ராஹிம், அனுமோகன், பிமிள்சித்தார்த் என புதிய முகங்கள் நடிக்கின்றனர். தமிழ், மலையாளம் இருமொழியில் உருவாகும் இப்படத்தை சினுசித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார். கைலாஷ் மேனன் இசை அமைக்கிறார். சென்னை, கேரளா மற்றும் துபாயில் படப்பிடிப்பு நடந்துள்ளது’ என்றார்.

Tags : Bharath ,producer ,
× RELATED தொடர் மழையால் பருத்தி ஏலம் ரத்து