×

பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது ஏன்? ஸ்ருதிஹாசன் விளக்கம்

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வந்த ஸ்ருதிஹாசன், கடந்த 2 வருடங்களாக புதுப்படத்தில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். தற்போது லாபம் என்ற படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்கிறார். இதற்கிடையே தன் அழகை மெருகேற்ற முகத்திலும், மூக்கிலும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ‘நான் குண்டாக இருக்கிறேன், ஒல்லியாக மாறிவிட்டேன் என்று என்னைப் பற்றி வரும் தகவல்கள் தவிர்க்க முடியாதது. ஹார்மோன்கள் மாற்றத்துக்கு ஏற்பவே நான் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் மாறியிருக்கிறேன். சமீபத்தில் நான் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். உடல் மற்றும் மனதில் ஏற்படும் மாற்றங்களை ஏற்க கற்றுக்கொள்ளுங்கள். அன்பைப் பரப்பி மகிழ்ச்சியாக இருங்கள்’ என்றார்.

Tags : Sruthihasan ,
× RELATED ‘கமல், சரிகா பிரிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே’: சொல்கிறார் ஸ்ருதிஹாசன்