×

பனைத்தொழிலுக்கு ஆதரவான கதை

சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் பனைத்தொழில் வளர வேண்டும், பனையால் கிடைக்கக்கூடிய பலன்கள் மக்களுக்குச்சென்றடைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ள படம், ‘பனை’. ஹரீஷ் பிரபாகரன், மேக்னா, வடிவுக்கரசி, அனுபமா குமார், கஞ்சா கருப்பு, ரிஷா, இமான் அண்ணாச்சி, டி.எஸ்.ஆர், ஜேக்கப் நடித்துள்ளனர். சிவகுமார் ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய, மீரா லால் இசை அமைத்துள்ளார். வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார் தினா நடனப் பயிற்சி அளித்துள்ளார். ஜெ.பிரபாகரன் இணை தயாரிப்பு செய்துள்ளார். ஏ.எம்.ஆர் கிரியேஷன்ஸ் சார்பில் எம்.ராஜேந்திரன் கதை எழுதி தயாரித்துள்ளார். ஆதி பி.ஆறுமுகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாகிறது.

The post பனைத்தொழிலுக்கு ஆதரவான கதை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,Tamil Nadu ,Harish Prabhakaran ,Meghna ,Vadikukarasi ,Anupama Kumar ,Ganja Karupu ,Risha ,Iman Annachi ,DSR ,Jacob ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED குற்றம்சாட்டப்பட்டவர்கள் தமிழக...