×

வில்லன் ஆனார் டைரக்டர்!

தடையற தாக்க, மீகாமன், தடம் போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் மகிழ்திருமேனி. இவர் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்த அனுராக் காஷ்யப்புக்கு பின்னணி குரலும் கொடுத்திருந்தார். தற்போது நடிகராகவும் தன்னுடைய சினிமா பயணத்தை விரிவாக்கியுள்ளார். சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் டெடி படத்தில் மகிழ்திருமேனி வில்லனாக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய்சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார். இதற்கிடையே டைரக்‌ஷனிலும் பிஸியாக இருக்கிறார். சைக்கோ வெற்றிக்குப் பிறகு உதயநிதி நடிக்கும் படத்தையும் இயக்கவுள்ளார். த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்துக்கு நாயகி முடிவாகவில்லையாம்.

இந்தப் படத்துக்கு தில்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் தகராறு, அண்ணாதுரை படங்களுக்கு ஒளிப்பதிவு பண்ணியவர். தொடர்ந்து நடிப்பதைப்பற்றி மகிழ்திருமேனியிடம் கேட்டபோது, நடிப்பதற்கு ஏராளமான பேர் அப்ரோச் பண்ணுகிறார்கள். ஆனால் டைரக்‌ஷனுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதால் செலக்டிவ்வான படங்களில் நடித்து வருகிறேன் என்றார்.

Tags : villain ,
× RELATED திரைப்படங்களின் வில்லனாக...