×

14-ம் தேதி விஜய் சொல்லும் குட்டிக்கதை

மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கு கிறார். சமீபத்தில் நெய்வேலியில் இதன் படப்பிடிப்பு நடந்தது. வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென்று படப்பிடிப்பு தளத்துக்கு சென்று விஜய்யை காரில் அழைத்துக்கொண்டு சென்னை வந்து அவரது வீட்டில் சோதனை நடத்தினர். பின்னர் படப்பிடிப்பில் கலந்துகொண்ட விஜய்யை காண ரசிகர்கள் திரண்டனர்.

அவர்களை சந்தித்த விஜய் வேன் மீது ஏறி நின்று செல்பி எடுத்து அதை தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டார். அது டிரெண்டிங் ஆனது. இந்நிலையில் வரும் 14ம் தேதி மாஸ்டர் படத்திலிருந்து ‘ஒரு குட்டி கதை’ என்ற பாடல் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது விஜய் சொல்லும் சாதாரண குட்டிக் கதையா அல்லது வில்லங்கமான குட்டிக்கதையா என்பதை அறிய ஆவலுடன் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Tags : Vijay ,
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...