×

பூஜா குமார் அவுட் சுமன் ரங்கநாதன் என்ட்ரி

கமலுடன் விஸ்வரூபம் முதல் மற்றும் 2ம் பாகத்தில் நடித்தவர் பூஜாகுமார். பின்னர் மீன் குழம்பும் மண்பானையும் படத்தில் நடித்தார். இதையடுத்து கபடதாரி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். திடீெரன்று அப்படத்திலிருந்து வெளியேறினார். இதையடுத்து அந்த வேடத்தை சுமன் ரங்கநாதன் ஏற்றிருக்கிறார். இவர் தமிழில்  விஜயகாந்துடன் மாநகர் காவல், சத்யராஜ் உடன் மேட்டுப்பட்டி, அஜீத்துடன் என்னை அறிந்தால் படங்களில் நடித்தவர். இப்படத்துக்கு ஜான் மகேந்திரனுடன் இணைந்து திரைக்கதை எழுகிறார் தனஞ்செயன். பிரதீப் இயக்குகிறார்.

படம் பற்றி தனஞ்செயன் கூறியதாவது: சிபிராஜ் ஹீரோவாக நடிக்கும் படம் கபடதாரி. இப்படம் கன்னடத்தில் ஹிட்டான ‘காவலுதாரி’ படத்தின் ரீமேக் ஆகும். முக்கிய பாத்திரம் ஒன்றில் நடிக்க பூஜாகுமார் தேர்வாகியிருந்தார். அவர் அவசரமாக வெளிநாடு செல்வதால் அவருக்கு பதிலாக தற்போது சுமன் ரங்கநாதன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 90களில் தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து சுமன் ரங்கநாதன், கபடதாரி மூலம் தமிழில் ரீஎன்ட்ரி ஆகிறார். அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் படமாகிவிட்டன. லலிதா தனஞ்செயன் தயாரிக்கிறார். சிபிராஜ் நாயகனாக நடிக்க நந்திதா ஸ்வேதா நாயகியாக நடிக்கிறார். நாசர், ஜெயப்பிரகாஷ், ேஜ.சதீஷ் குமார் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். சைமன் கே கிங் இசை அமைக்கிறார். ராசாமதி ஒளிப்பதிவு’ என்றார்.

Tags : Pooja Kumar Out ,
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!