அவசரப்பட்டு சொத்துக்களை விற்ற அனுஷ்கா

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் நடிகை அனுஷ்கா. கடந்த சில வருடங்களாக அவர் 3 கோடி சம்பளம் வாங்குகிறா ராம். கோடி கோடியாக சேர்த்த பணத்தில் வாங்கிய சொத்துக்களை அவசரப்பட்டு விற்றதால் கோடிகளில் நஷ்டம் அடைந்திருக்கிறார். ஐதராபாத்தில் 4 படுக்கை அறை வசதிகள் கொண்ட 2 வீடுகளை அனுஷ்கா 5 கோடி மதிப்பில் வாங்கினார்.

தெலங்கானா போராட்டத்தின்போது ஐதராபாத்தில் சொத்துக்களின் விலை குறைந்துவிடும் என்று பேச்சு எழுந்ததையடுத்து 2 வீடுகளையும் விற்று விட்டராம். ஆனால் போராட்டம் முடிந்த பிறகு அங்கிருந்த சொத்துக்களின் விலை மதிப்பு அதிகரித்தது. இவரது வீடுகளை வாங்கியவர் பின்னர் அதனை 10 கோடிக்கு விற்றாராம். அதேபோல் விசாகப்பட்டினத்தில் ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கியிருந்தார் அனுஷ்கா.

அமராவதி பகுதியில் ஆந்திராவின் தலைநகர் கட்ட அப்போதைய முதல்வர் முடிவு செய்தார். இதனால் சொத்துக்களை ஆக்ரமிப்பு செய்வார்கள் என்று பயந்து கைவசமிருந்த சொத்துக்களில் 80 சதவீதத்தை அவசர அவசரமாக விற்றுவிட்டாராம். ஆனால் இப்போது அங்கு சொத்துக்களின் மதிப்பு பெரிய அளவுக்கு உயர்ந்துவிட்டதாம். அவசரப்பட்டு குறைந்த விலைக்கு சொத்துக்களை விற்றதில் கோடிகளில் நஷ்டம் ஏற்பட்டதால் அனுஷ்கா சோகத்தில் இருக்கிறாராம்.

Related Stories:

>