×

அஜித் ஜோடியாகும் ஹுமா குரேஷி

காலா படத்தில் ரஜினிகாந்தின் முன்னாள் காதலியாக நடித்தவர் ஹுமா குரேஷி. பாலிவுட் நடிகையான இவர், பல இந்தி படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் காலா படத்துக்கு பிறகு அஜித் ஜோடியாக வலிமை படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். போனிகபூர் தயாரிப்பில் அஜித் போலீசாக நடிக்கும் இந்த படத்தை வினோத் இயக்குகிறார்.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை படங்களுக்கு பிறகு வினோத் இயக்கும் படமிது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிப்பது யார் என்ற கேள்வி எழுந்தது. இந்தி நடிகை யாமி கவுதம் நடிப்பார் என சொல்லப்பட்டது. ஆனால் அவர் ஒப்பந்தம் செய்யப்படவில்ைலயாம். அவருக்கு பதிலாக ஹுமா குரேஷி நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : Huma Qureshi ,Ajith ,
× RELATED புதிய வீடுகள் கட்டித்தர கலெக்டரிடம் கோரிக்கை