×

ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.24.71 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.24.71 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு உரிய வசதிகளுடன் கூடிய புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள் கட்டும் திட்டம் 2008ம் ஆண்டு கலைஞர் தலைமையிலான அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, தற்போது வரை 278 ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு, அதில் 199 கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.இதன் தொடர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தில் ரூ.2 கோடியே 84 லட்சத்திலும், சேலம் மாவட்டம், வாழப்பாடி ஒன்றியத்தில் ரூ.3 கோடியே 33 லட்சத்திலும், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஒன்றியத்தில் ரூ.2 கோடியே 83 லட்சத்திலும் மற்றும் விளாத்திகுளம் ஒன்றியத்தில் ரூ.3 கோடியே 5 லட்சத்திலும், கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் ரூ.2 கோடியே 87 லட்சத்திலும், நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியத்தில் ரூ.2 கோடியே 94 லட்சத்திலும் கட்டப்பட்டுள்ள 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள், திருவாரூர் மாவட்டம், திருவாரூரில் ரூ.6 கோடியே 85 லட்சத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட அளவிலான அலுவலகங்களை ஒருங்கிணைக்கும் வகையில், பல்வேறு அலுவலர்களுக்கான தனித்தனி அறைகளுடன் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாகக் கட்டிடம் என மொத்தம் ரூ.24 கோடியே 71 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்களையும், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாக கட்டிடத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று, சென்னை தலைமை செயலகத்தில் திறந்து வைத்தார்.மேலும், ஊரக பகுதிகளில் செயல்டுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மக்கள் நல திட்டங்களை திறம்பட கண்காணித்திட‌ 24 மாவட்டங்களில் பணிபுரிந்துவரும் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், உதவி இயக்குநர், உதவித் திட்ட அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர்களின் அலுவலக பயன்பாட்டிற்கு ரூ.6 கோடியே 63 லட்சத்தில் 81 பொலிரோ கார்களை வழங்கிடும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறை  அமைச்சர் பெரியகருப்பன், தலைமை செயலாளர் இறையன்பு, ஊரக வளர்ச்சித் துறை  செயலாளர் அமுதா, துறையின் ஆணையர் தாரேஸ் அஹமது ஆகியோர் கலந்து கொண்டனர்….

The post ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.24.71 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Rural Development Department ,CM G.K. Stalin ,Chennai ,Chief President ,B.C. G.K. Stalin ,Pavilion Union ,Dinakaran ,
× RELATED ஜார்க்கண்டில் பரபரப்பு!: மலைபோல்...