×

ஜார்க்கண்டில் பரபரப்பு!: மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த ரூ.25 கோடி பணம் பறிமுதல்; அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை..!!

ராஞ்சி: ஜார்க்கண்டில் அமைச்சரின் உதவியாளரின் வீட்டு வேலைக்காரர் வீட்டில் இருந்து ரூ.25 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் கிராமப்புறம் மேம்பாட்டு துறையின் முதன்மை பொறியாளராக பணியாற்றி வந்தவர் வீரேந்தர குமார் ராம். இவர் ஜார்கண்ட் மாநில அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் முறைகேடுகள் நடந்ததாக தொடர்ந்து புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஜார்க்கண்ட் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை பொறியாளர் வீரேந்திர கே.ராம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் கைது செய்யப்பட்டார்.

5 நாள் விசாரணைக்கு பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக ஜார்கண்ட் மாநிலத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆலம்கீர் ஆலம் வீடு உட்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில், அமைச்சர் ஆலம்கிர் ஆலமின் தனிச்செயலரின் வீட்டு வேலைக்காரர் சஞ்சீவ்லால் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் பணக்குவியல் சிக்கியது. அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் அறை ஒன்றில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஜார்க்கண்டில் பரபரப்பு!: மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த ரூ.25 கோடி பணம் பறிமுதல்; அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,Ranchi ,Virendara Kumar Ram ,Rural Development Department ,Dinakaran ,
× RELATED பணமோசடி வழக்கு ஜார்க்கண்ட் அமைச்சரிடம் ஈடி விசாரணை