×

இசை ஆல்பம் வெளியிடும் நித்யா மேனன்

நடிப்பது மட்டுமின்றி, பின்னணி பாடுவதிலும் வல்லவர், நித்யா மேனன். மிஷ்கின் இயக்கியுள்ள சைக்கோ என்ற படத்தில் நடித்துள்ள அவர், தி அயர்ன் லேடி என்ற படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நடிக்கிறார். சில படங்களில் பின்னணி பாடியுள்ள நித்யா மேனன், தற்போது தனி இசை ஆல்பம் ஒன்றை வெளியிட திட்டமிட்டு உள்ளார்.

இதை ஆடியோவில் மட்டும் வெளியிடலாமா? அல்லது வீடியோ ஆல்பம் போல் வெளியிடலாமா என்று யோசித்து வருகிறார். வீடியோ ஆல்பம் என்றால், அதில் நடிக்கக்கூடாது என்று முடிவு செய்திருக்கிறார். ஆல்பத்துக்கு சவுமிக் தத்தா இசை அமைக்கிறார்.

Tags : Nithya Menon ,
× RELATED ரொமான்டிக் காமெடி கதையில் நித்யா மேனன்